ஆன்லைன் சந்தை · வாரந்தோறும்
ஆன்லைன் ஆட்டுச் சந்தை: சந்தைக்குப் போகாமலே ஆடு வாங்கலாம், விற்கலாம்
பண்ணைகள், வியாபாரிகளின் வெள்ளாடு, செம்மறி ஆடுகள், உயிர் எடை கிலோ விலையுடன், உங்கள் போனில். ஒவ்வொரு லாட்டுக்கும் அந்த வாரமே பண்ணையில் எடுத்த வீடியோ. ஏற்றும்போது தராசில் எடை; போக்குவரத்தும் பணமும் The Fat Lamb Co பார்த்துக்கொள்ளும்.
இந்த வாரச் சந்தை
Kongu online sandhai - edition 1 · Erode, Karur, Salem
1 லாட்டுகளில் 50 ஆடுகள் விற்பனைக்கு
இனங்கள்: மேச்சேரி
வாங்குபவர்களுக்கு
ஆடு வாங்குவது எப்படி
- 01WhatsApp எண்ணுடன் சேருங்கள்பெயரும் WhatsApp எண்ணும் கொடுங்கள்; அந்த எண்ணுக்கு வரும் 6 இலக்கக் குறியீட்டை உள்ளிடுங்கள்.
- 02எதை வாங்க வேண்டும் என்று சொல்லுங்கள்இனம், எடை, எத்தனை ஆடுகள், எங்கே டெலிவரி என்ற சிறிய படிவம். அனுப்பியதும் உங்கள் சந்தைப் பக்கம் திறக்கும்; இணைப்பு WhatsApp-லும் வரும்.
- 03கடைகளைப் பாருங்கள்இனம், எடை, கிடா / பெட்டை என்று வடிகட்டுங்கள்; உங்கள் இடத்திலிருந்து எவ்வளவு தூரம் என்றும் தெரியும். ஒவ்வொரு லாட்டுக்கும் உயிர் எடை கிலோ விலை.
- 04வாங்குங்கள் அல்லது விலை சொல்லுங்கள்சந்தை திறந்திருக்கும்போது சொன்ன விலைக்கு வாங்கலாம், அல்லது உங்கள் விலையைச் சொல்லலாம். ஒவ்வொரு பதிலும் WhatsApp-ல் வரும்.
- 05தராசில் எடை, வீட்டு வாசலில் ஆடுஏற்றும்போது தராசில் எடை போடுவோம்; அந்த எடைக்கே பணம். போக்குவரத்தை நாங்களே ஏற்பாடு செய்கிறோம்.
ஏன் நம்பலாம்
பார்க்காமல் வாங்க வேண்டாம்
- 01அந்த வாரமே எடுத்த வீடியோபோன் கேமராவில் மட்டும் (பழைய வீடியோ ஏற்றமுடியாது), சந்தையின் குறியீட்டுச் சொல், தேதி, நேரம் படத்திலேயே பதிந்து.
- 02பண்ணையில்தான் எடுத்ததுபண்ணை இருக்கும் இடத்திலிருந்து 2 கி.மீ.க்குள் எடுத்த வீடியோவுக்கு 'பண்ணையில்' என்ற குறி.
- 03நேரலையில் பாருங்கள்'நேரலையில் காட்டுங்கள்' அழுத்தினால், விற்பவரை வீடியோ அழைப்பில் இணைத்து ஆடுகளை நேரடியாகக் காட்டுகிறோம்.
- 04தராசு எடைக்கே விலைவிலை உயிர் எடை கிலோவுக்கு; மொத்தத் தொகை ஏற்றும்போது தராசில் பார்த்த எடையில்.
விற்பவர்களுக்கு
உங்கள் ஆடுகளை விற்பது எப்படி
- 01WhatsApp எண்ணுடன் சேருங்கள்பெயர், WhatsApp எண், அதற்கு வரும் குறியீடு. பிறகு உங்கள் பண்ணை இருக்கும் இடத்தை வரைபடத்தில் குறியுங்கள்.
- 02உங்கள் இருப்பை அனுப்புங்கள்இனம், எடை, எத்தனை ஆடுகள், நீங்கள் கேட்கும் விலை. மாறும்போதெல்லாம் உங்கள் பக்கத்திலேயே மாற்றலாம்.
- 03சந்தையில் உங்கள் கடைஉங்கள் லாட்டுகள் சந்தையில் ஒரு கடை எண்ணுடன் வரும். வாங்குபவர்களுக்கு உங்கள் பெயரோ எண்ணோ தெரியாது.
- 04போனில் ஒரு வீடியோசந்தையின் குறியீட்டுச் சொல்லுடன் ஆடுகளை 30 வினாடி படம் எடுங்கள்; வாங்குபவர்கள் அதைப் பார்த்து நம்பி வாங்குவார்கள்.
- 05விற்றதும் சொல்கிறோம்ஒப்பந்தம் ஆனதும் எத்தனை ஆடுகளைத் தனியாக வைக்க வேண்டும் என்று WhatsApp-ல் சொல்கிறோம்.
யாருக்கு
இந்தச் சந்தை யாருக்கு
- இறைச்சிக் கடைகள், ஆடு வியாபாரிகள்
- ஹோட்டல்கள், கேட்டரிங், பிரியாணி கடைகள்
- இனப்பெருக்கத்துக்கு ஆடு தேடும் பண்ணையாளர்கள்
- திருவிழா, கிடா வெட்டு, பக்ரீத்துக்கு ஆடு வாங்குபவர்கள்
- ஆடு விற்க விரும்பும் பண்ணைகள், வியாபாரிகள்
இனங்கள்
சந்தையில் வரும் ஆடுகள்
வெள்ளாடு, செம்மறி ஆடு இரண்டும்: கிடா, பெட்டை, எடை வாரியாக. விற்பவர்கள் பட்டியலிடும் இனங்கள்:
- மேச்சேரி
- மயிலம்பாடி
- ஜூடுபி
- எட்டயபுரம்
- தலச்சேரி
- ராமநாடு
- வெள்ளாடு
சில கேள்விகள்
ஆன்லைன் ஆட்டுச் சந்தை என்றால் என்ன?
வாரந்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் திறக்கும் சந்தை, உங்கள் போனில். பண்ணைகள், வியாபாரிகளின் ஆடுகள் கடை எண்களுடன், உயிர் எடை கிலோ விலை, அந்த வாரமே எடுத்த வீடியோவுடன் இருக்கும். சந்தைக்குப் போகாமலே வாங்கலாம், விற்கலாம்.
விலை எப்படி?
ஒவ்வொரு லாட்டுக்கும் உயிர் எடை கிலோ விலை. சொன்ன விலைக்கே வாங்கலாம், அல்லது உங்கள் விலையைச் சொல்லலாம்; நாங்கள் ஏற்கலாம், வேறு விலை சொல்லலாம். மொத்தத் தொகை ஏற்றும்போது தராசில் பார்த்த எடையில்.
ஆடுகளை நேரில் பார்க்காமல் எப்படி நம்புவது?
ஒவ்வொரு லாட்டுக்கும் விற்பவர் அந்த வாரமே போன் கேமராவில் எடுத்த வீடியோ, சந்தையின் குறியீட்டுச் சொல்லுடன்; பண்ணையிலேயே எடுத்ததா என்றும் காட்டும். இன்னும் வேண்டுமென்றால் 'நேரலையில் காட்டுங்கள்' அழுத்துங்கள், வீடியோ அழைப்பில் காட்டுகிறோம்.
எப்படிச் சேருவது?
பெயரும் WhatsApp எண்ணும் கொடுத்து, அந்த எண்ணுக்கு வரும் 6 இலக்கக் குறியீட்டை உள்ளிடுங்கள். வாங்குபவர்கள் ஒரு சிறிய படிவத்தை அனுப்பியதும் சந்தையைப் பார்க்கலாம்; வாங்கவும் விலை சொல்லவும் நாங்கள் சரிபார்த்ததும் முடியும்.
போக்குவரத்தும் பணமும் யார் பார்ப்பது?
The Fat Lamb Co. விற்பவரிடமிருந்து ஆடுகளை ஏற்றி, தராசில் எடை போட்டு, உங்களிடம் கொண்டு சேர்க்கிறோம்.
விற்பவரின் விவரம் வாங்குபவருக்குத் தெரியுமா?
இல்லை. வாங்குபவர்களுக்குக் கடை எண்ணும் மாவட்டமும் மட்டுமே தெரியும்; விற்பவரின் பெயர், எண், சரியான இடம் தெரியாது. விற்பவர்களுக்கும் வாங்குபவரின் விவரம் அனுப்பமாட்டோம்.
என் ஆடுகளை இந்தச் சந்தையில் விற்கலாமா?
ஆம். 'ஆடு விற்க சேருங்கள்' அழுத்தி, உங்கள் பண்ணையின் இடத்தையும் இருப்பையும் (இனம், எடை, எண்ணிக்கை, விலை) அனுப்புங்கள். அதைப் பார்த்து உங்கள் லாட்டுகளைச் சந்தையில் சேர்க்கிறோம்.